33 சதவீத இடஒதுக்கீடு கோரி பெண்கள் விழிப்புணர்வு பேரணி
By DIN | Published On : 09th June 2019 02:53 AM | Last Updated : 09th June 2019 02:53 AM | அ+அ அ- |

உசிலம்பட்டி அருகே உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவீத இட ஒதுக்கீடு கோரி, பெண்கள் சனிக்கிழமை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் பெண்கள் கூட்டமைப்பு சார்பில், பெண்களுக்கு கல்வி, சம உரிமை மற்றும் 33 சதவீத இட ஒதுக்கீட்டை வரும் உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது.
கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி முன்பாக தொடங்கிய இப்பேரணியை, பெண்கள் கூட்டமைப்பு உரிமை குழு நிர்வாகி மகேஸ்வரி தொடக்கி வைத்தார். பேரணியானது, மீனாட்சிபட்டி வரை சென்று முடிவடைந்தது. இதில், பெண் உரிமைகளுக்கான பதாகைகளை ஏந்தியவாறு சென்ற பெண்கள், 33 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி முழக்கங்களை எழுப்பினர். பேரணியில் 100-க்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர்.