ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் மாணவர் சேர்க்கை
By DIN | Published On : 09th June 2019 02:52 AM | Last Updated : 09th June 2019 02:52 AM | அ+அ அ- |

ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ், மதுரை மாவட்டத்தில் செயல்படும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் நிகழாண்டுக்கான மாணவ, மாணவியர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
பள்ளி மாணவ, மாணவியர் சம்பந்தப்பட்ட விடுதிகளில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து, தங்களது பள்ளித் தலைமை ஆசிரியரின் கையொப்பத்துடன் விடுதிக் காப்பாளரிடம் ஜூன் 18-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். ஜூன் 20 ஆம் தேதி மாணவர் சேர்க்கை தேர்வுக் குழுவினரால் மேற்கொள்ளப்படும்.
கல்லூரி மாணவ, மாணவியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 5 ஆம் தேதிக்குள் விடுதிக் காப்பாளரிடம் ஒப்படைக்கலாம். இவர்களுக்கான தேர்வு ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும். கல்லூரி முதல்வர், பள்ளித் தலைமை ஆசிரியர், உதவித் தலைமை ஆசிரியர் ஆகியோரைக் கொண்ட குழுவினரால், விடுதிகளுக்கு மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு விடுதியிலும் தலா 5 இலங்கைத் தமிழர்கள் சேர்க்கப்படுவர். இத்தகவலை, மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ். சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.