திருவாதவூர் அருகே இரு தரப்பினர் மோதல் 12 பேர் மீது வழக்கு
By DIN | Published On : 09th June 2019 02:54 AM | Last Updated : 09th June 2019 02:54 AM | அ+அ அ- |

திருவாதவூர் அருகிலுள்ள சுண்ணாம்பூரில் இடப் பிரச்னை தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, 12-க்கும் மேற்பட்டோர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுண்ணாம்பூரைச் சேர்ந்த வீரணன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரிடையே இடப் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கோஷ்டி மோதலாக மாறியது. இதில்,
காயமடைந்த இருவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து இரு தரப்பினரும் மேலூர் காவல் நிலையத்தில் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில், போலீஸார் இரு தரப்பைச் சேர்ந்த 12-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.