அங்கன்வாடி பணியாளர் இடமாற்ற விவகாரம்: மதுரை மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு

அங்கன்வாடிப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட பெண்கள், அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக

அங்கன்வாடிப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட பெண்கள், அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில், ஜூலை 17 -ஆம் தேதிக்குள் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது
ஜூன்  3 -ஆம் தேதி, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அன்ன லெட்சுமி என்பவர் வளையப்பட்டி அங்கன்வாடியில் ஊழியராக  நியமிக்கப்பட்டார். ஆனால், மாவட்ட நிர்வாகம் அவரை மறுநாளே அருகிலுள்ள மற்றொரு கிராமமான கிழவநேரிக்கு இடமாற்றம் செய்தது. இதேபோல் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஜோதி லெட்சுமி என்பவரும் மதிப்பனூர் கிராமத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பட்டியலின மக்கள் செய்யும் உணவுகளை தங்கள் குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கூறியதால் இந்தப் பிரச்னை உருவானதாக கூறப்படுகிறது. 
மாவட்ட நிர்வாகத்துக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி: இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தார் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்,  நீதிபதி துரை.ஜெயச்சந்திரன். மேலும் இடமாற்றம் செய்யக் கோரி கொடுக்கப்பட்ட அழுத்தத்துக்கு பணிந்து மாவட்ட நிர்வாகம்  அங்கன்வாடி பணியாளர்களை வேறு இடத்துக்கு மாற்றம் செய்தது ஏன்? மாவட்ட நிர்வாகத்தின் இந்தச் செயல் மனித உரிமை மீறல் இல்லையா? இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை ஜூலை 17 -ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com