திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது வியாழக்கிழமை தப்பியோடிய சிறுவனை காவல்துறையினர் பிடித்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த சிறுவன் ராஜபாண்டி. இவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு ராஜபாண்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ராஜபாண்டியைக் காணவில்லை. அவருக்குப் பாதுகாப்புக்காக வந்த காவல்துறையினர் பல இடத்தில் தேடினர். அப்போது மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் ராஜபாண்டியை சுற்றி திரிந்தது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் பிடித்து சிறார் பள்ளிக்கு அழைத்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.