உசிலம்பட்டி புத்தூர் முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்த விழாவில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். அதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது.
பின்னர் தீப ஆராதனை, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் உசிலம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.