டிஜிட்டல் சேவைக்கு மாறாத கேபிள் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
By DIN | Published On : 30th March 2019 07:23 AM | Last Updated : 30th March 2019 07:23 AM | அ+அ அ- |

டிஜிட்டல் ஒளிபரப்புக்கு மாறாத கேபிள் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பில் அனலாக் முறை நிறுத்தப்பட்டது, தற்போது டிஜிட்டல் முறையில் செட்ஆப் பாக்ஸ்கள் மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலமாக இந்த டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை வழங்கப்படுகிறது.
சில உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர்கள், எம்எஸ்ஓ-க்கள் இன்னும் அனலாக் சேவையை ஒளிபரப்பு வருகின்றனர். இது கேபிள் தொலைக்காட்சி ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் குற்றமாகும். ஆகவே, அனலாக் முறை ஒளிபரப்பு சேவையை கேபிள் ஆபரேட்டர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...