பட்டப்படிப்பு: 2008-க்கு முன் படித்தவர்கள் தேர்வெழுத இறுதி வாய்ப்பு
By DIN | Published On : 30th March 2019 07:21 AM | Last Updated : 30th March 2019 07:26 AM | அ+அ அ- |

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2008 மற்றும் அதற்கு முன்னர் பயின்று பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மாணவர்கள் தேர்வெழுத இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2008 மற்றும் அதற்கு முன்னர் இளங்கலை, முதுகலை, எம்பில் பட்டப்படிப்பு பயின்று தேர்வில் தவறிய மாணவர்கள் அனைவரும் ஏப்ரல் 2019-இல் தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இளங்கலை தேர்வுகளுக்கு வழக்கமான தேர்வுக் கட்டணத்துடன் ரூ.1000, முதுகலை, எம்பில் தேர்வுகளுக்கு வழக்கமான கட்டணத்துடன் ரூ.2000 சிறப்புக்கட்டணமாக செலுத்தி தேர்வு எழுதலாம்.
பழைய பாடத்திட்டத்தின்படி தேர்வு எழுதுவதற்கு இதுவே கடைசி வாய்ப்பு. இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று காமராஜர் பல்கலைக்கழக தேர்வாணையர் ஓ.ரவி தெரிவித்துள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...