பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ்காரர் கைது
By DIN | Published On : 30th March 2019 07:22 AM | Last Updated : 30th March 2019 07:22 AM | அ+அ அ- |

உசிலம்பட்டி அருகே பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸ்காரர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
உசிலம்பட்டி அருகேயுள்ள குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த முத்துவாழன் மனைவி அமுதா (30). இவர் உசிலம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சார்பு-ஆய்வாளர் பதவி உயர்வுக்காக அமுதா படித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து உசிலம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் சோழவந்தானைச் சேர்ந்த போலீஸ்காரரான சிதம்பரம் மகன் ஆறுமுகம் (30) அமுதா இறப்பதற்கு முன்பு செல்லிடப்பேசியில் 45 நிமிடங்கள் பேசியது தெரியவந்தது. அதன் பின்பு அமுதா தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதால் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஆறுமுகத்தை போலீஸார் கைது செய்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...