திருமங்கலத்தில் லாரி ஓட்டுநர் மர்மச் சாவு
By DIN | Published On : 05th May 2019 03:05 AM | Last Updated : 05th May 2019 03:05 AM | அ+அ அ- |

திருமங்கலம் அருகே சனிக்கிழமை லாரி ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
திருமங்கலத்தை அடுத்த கரிசல்பட்டி விலக்கு பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடப்பதாக, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் அவரது சடலத்தை மீட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்து கிடந்தவர் விருதுநகர் மாவட்டம் கோட்டையூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மாரியப்பன் (42) எனத் தெரியவந்தது. இவர் 4 திருமணம் செய்தவர் என்றும், கடந்த வியாழக்கிழமை வீட்டைவிட்டுச் சென்றவர் காணாமல் போய்விட்டார் என்றும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...