உசிலம்பட்டியில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்
By DIN | Published On : 15th May 2019 06:38 AM | Last Updated : 15th May 2019 06:38 AM | அ+அ அ- |

உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 4 பேரிடம் சோதனை செய்த போது, அவர்களிடம் 4 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் ரொக்கம் ரூ.2,250 ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டம், சத்தன்பள்ளி தாலுகா, பேரி சாரளா கிராமத்தைச் சேர்ந்த தங்கசாமி மகன் பெரியசாமி (70), இதே மாநிலம் விஜய வாடா மாவட்டம், சிட்டி நகர் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் மனைவி லெட்சுமி (35), உசிலம்பட்டி சன்னாசி செட்டியார் தெருவைச் சேர்ந்த காசிராஜா மனைவி நதியா (40), கணவாய் பட்டியைச் சேர்ந்த தங்கமலைதேவர் மகன் பாலகிருஷ்ணன் (38) என்பதும் தெரியவந்தது.
இது குறித்து உசிலம்பட்டி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.