கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவர் மீது வழக்கு
By DIN | Published On : 15th May 2019 06:38 AM | Last Updated : 15th May 2019 06:38 AM | அ+அ அ- |

மதுரை அய்யர்பங்களா சந்திப்பில் ஆட்டோ ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்தனர்.
மதுரை சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் அன்பரசன்(23). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை, அழகர்கோவில் பிரதானசாலை மூன்றுமாவடி அய்யர்பங்களா சந்திப்பு அருகே ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆட்டோவில் மோதுவது போல நிறுத்தினர். அவர்கள் தாங்கள் புறாப்பாண்டி, பாட்டில்மணி எனவும் பல கொலைகளை செய்துள்ள ரௌடிகள் எனவும் கூறி கத்தியைக் காட்டி அன்பரசனை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அன்பரசனின் சட்டைப் பையில் இருந்த ரூ.1,500 ஐ பறித்துவிட்டு தப்பிச் சென்றனராம். இதுகுறித்து அன்பரசன் அளித்தப் புகாரின் பேரில் கே.புதூர் போலீஸார் வழிப்பறியில் ஈடுபட்ட புறாப்பாண்டி, பாட்டில்மணி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.