மதுரை தொழிற்பேட்டை சாலை சீரமைக்கப்படுமா?
By DIN | Published On : 15th May 2019 06:42 AM | Last Updated : 15th May 2019 06:42 AM | அ+அ அ- |

மதுரை கோ.புதூர் தொழிற்பேட்டை பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதால் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை அரசு ஐடிஐ சாலையில் இருந்து கோ.புதூர் தொழிற்பேட்டை வரை சாலை சீரமைக்கப்படாமல் பழுதடைந்துள்ளது. தொழிற்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருவதால் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் இவர்கள் இச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக பள்ளங்களுடன் காட்சியளிப்பதால் இரவு நேரங்களில் மட்டுமின்றி பகலில் கூட வாகனங்கள் ஓட்டுவதற்கு சிரமப்பட வேண்டிய சூழல் உள்ளது. எனவே அரசு ஐடிஐ முதல் கோ.புதூர் தொழிற்பேட்டை வரை சாலைகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.