மேலூர் சுற்றுவட்டாரத்தில் மழை
By DIN | Published On : 15th May 2019 06:43 AM | Last Updated : 15th May 2019 06:43 AM | அ+அ அ- |

மேலூர், கொட்டாம்பட்டி, வல்லாளபட்டி சுற்றுவட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் அரைமணிநேரம் பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது.
பகல்நேரத்தில் அக்கினி வெயில் காரணமாக மேலூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில், மாலை 6 மணியளவில் சூறைக் காற்றுடன் மழைபெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.