மதுரையில் வைகாசி விசாகத் திருவிழா
By DIN | Published On : 19th May 2019 07:32 AM | Last Updated : 19th May 2019 07:32 AM | அ+அ அ- |

மதுரையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள் முருகப் பெருமானின் அவதார நாளாக கொண்டாடப்படுகிறது. இது வைகாசி விசாகத் திருவிழாவாக அனைத்து முருகன் கோயில்களிலும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மதுரை நேதாஜி சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயில் மற்றும் ராஜாஜி பூங்கா முருகன் கோயில்களிலும் முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதல் சிறப்பு பூஜை, பாலாபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.ஆயிரக்கணகான பக்தர்கள் காலை மற்றும் மாலையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி பால்குடம் எடுத்தனர்.
மேலும் மதுரையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்திற்கு பால்காவடி, பன்னீர்காவடி, பறவைக்காவடி எடுத்து பாதயாத்திரையாகச் சென்றனர்.