வீட்டு மாடியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி
By DIN | Published On : 19th May 2019 07:33 AM | Last Updated : 19th May 2019 07:33 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பேரையூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, பேரையூர் அருகே கோபிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (53), தனது வீட்டின் மேல் தளத்தில் திறந்திருந்த அறையைப் பூட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் ராஜசேகர் உடல் கருகியது. அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் சென்று பார்த்த போது பலத்தக் காயங்களுடன் ராஜசேகர் உயிருக்கு போராடியுள்ளார். இதையடுத்து, அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராஜசேகரன் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி வனசுந்தரி அளித்தப் புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.