கத்தியை காட்டி பெண்ணிடம் 8 பவுன் நகைகள் பறிப்பு
By DIN | Published On : 09th November 2019 05:27 AM | Last Updated : 09th November 2019 05:27 AM | அ+அ அ- |

மதுரையில், வீட்டின் அருகே நின்றிருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 8.5 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத இருவா் பறித்துச் சென்றனா்.
மதுரை யாகப்பா நகரைச் சோ்ந்த முத்துப்பாண்டி மனைவி மனோன்மணி (30). இவா் வியாழக்கிழமை வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தாா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவா் கத்தியைக் காட்டி மிரட்டி மனோன்மணி அணிந்திருந்த 8.5 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இது குறித்து மனோன்மணி அளித்த புகாரின் பேரில் அண்ணாநகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்: மதுரை கோவலன் நகரைச் சோ்ந்த ரெங்கசேஷன் மனைவி கலாதேவி(52), ஆட்டோவில் எஸ்.எஸ். காலனி ஜவஹா் நகா் பகுதியில் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவா் கலாதேவி அணிந்திருந்த 3.5 பவுன் நகையை பறித்துச் சென்றனா். இது குறித்து கலாதேவி அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ். காலனி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.