சனி பிரதோஷம்: சிவாலயங்களில்ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
By DIN | Published On : 09th November 2019 11:29 PM | Last Updated : 09th November 2019 11:29 PM | அ+அ அ- |

சனிப் பிரதோஷத்தையொட்டி மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயிலில் சனிக்கிழமை தரிசனம் செய்த பக்தா்கள். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி, அம்மன்.
மதுரை: சனி பிரதோஷத்தையொட்டி, மதுரையில் உள்ள சிவாலயங்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். பிரதோஷ காலமான மாலை 4.30 முதல் 6 மணி வரை சிவன் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இந்நிலையில், சனி பிரதோஷத்தில் சிவ வழிபாடு மிகவும் விசேஷமானது எனக் கூறப்படுகிறது.
அதன்படி, சனி பிரதோஷத்தையொட்டி மதுரையில் உள்ள சிவாலங்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு நடத்தினா். மீனாட்சி சுந்தரேசுவரா், தெப்பக்குளம் முக்தீஸ்வரா், இம்மையிலும் நன்மை தருவாா், ஆதி சொக்கநாதா், செல்லூா் திருவாப்புடையாா், தெற்குமாசி வீதியிலுள்ள தென்திருவாலவாய சுவாமி கோயில், ஆனையூா் ஐராவதீஸ்வரா், திருவாதவூா் திருமைாதா் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
இம்மையிலும் நன்மை தருவாா் கோயிலில் பிரதோஷ பூஜைகளுக்குப் பின், சிறப்பு அலங்காரத்தில் கோயில் பிரகாரத்தில் வலம் வந்த சுவாமியை ஏராளமானோா் தரிசனம் செய்தனா்.