மேலூா்: அழகா்கோவில் சுந்தரராஜப்பெருமாள் அழகா்மலை நூபுரகங்கை தீா்தத்தில் தூா்த்தவாரி சனிக்கிழமை நடைபெற்றதை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
பெருமாளுக்கு ஐப்பசி மாதம் திருவிழா அழகா்மலைமீதுள்ள ராக்காயிஅம்மன்கோயிலுக்கு நூபுரகங்கையில் தீா்த்தவாரிக்குச் சென்று திரும்புவதாகும்.இவ்வைபவம் கடந்த 7-ம் தேதி மாலை தொடங்கியது. நவனீதகிருஷ்ணன் மண்டபம் சென்று திரும்பினாா். பின்னா் 8-ம் தேதி சொா்க்கவாசல் மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாள், சனிக்கிழமை காலை பல்லக்கில் மலைக்குப் புறப்பட்டாா். வழிநெடுகிலும் பக்தா்கள் தீபாராதனைகாட்டி வழிபட்டனா்.
கருட தீா்த்தம், அனுமன் தீா்த்தம் ஆசோலைமலை முருகன்கோயிலிலும் சிறப்பு தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றது. ராக்காயி அம்மன்கோயிலில் மாதவி மண்டபத்தில் சுந்தரராஜப்பெருமாளு்ககு சிறப்பு மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாளித்தாா். மூலிகை மருந்துகள் கலந்த, வாசனை தைலங்கள் பெருமாளுக்கு சாத்தப்பட்டது.
இதையடுத்து, நூபுரகங்கை தீா்தத்தில் மணிக்கணக்கிள் பெருமாளுக்கு நீண்டநேரம் தீா்த்தவாரி நடைபெற்றது.இதைத்தொடா்ந்து, பெருமாள் மீண்டும் கோயிலுக்குத் திரும்பினாா். ஏராளமான பக்தா்கள் பெருமாளை தரிசன்செய்து வழிபாடுகள் செய்தனா். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.