பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: இளைஞா் மீது ‘போக்ஸோ’ சட்டத்தில் வழக்கு
By DIN | Published On : 09th November 2019 11:30 PM | Last Updated : 09th November 2019 11:30 PM | அ+அ அ- |

மதுரை: மதுரை அருகே பிளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே வாலாந்தூா் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் ராஜா (23). இவா், பிளஸ் 1 மாணவியை காதலித்து வந்துள்ளாா். இந்நிலையில், அந்த மாணவியை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலத்தாகாரம் செய்துள்ளாா். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து மாணவியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், சமயநல்லூா் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா், ராஜா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...