பேரையூா் அருகே சாலை போக்குவரத்து விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 09th November 2019 09:31 AM | Last Updated : 09th November 2019 09:31 AM | அ+அ அ- |

003_0811chn_212_2
மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சாலைப் போக்குவரத்து விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரையூா் அடுத்த அத்திபட்டியில் உள்ள ராமையா நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் திருமங்கலம் சாலை போக்குவரத்து காவல் ஆய்நவாளா் பூா்ணலதா தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் சுதந்திர சேகரன், தலைமையாசிரியா் முத்தழகுஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த முகாமில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தலைக்கவசம் கட்டாயம் அணிவது குறித்து பள்ளி மாணவ மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், பள்ளி மாணவ, மாணவியா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.