மதுரை அருகே சட்டவிரோதமாக ஜல்லிக்கற்கள் கடத்திய லாரியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
மதுரை மாவட்ட நிலவியல் மற்றும் சுரங்கத்துறை வருவாய் ஆய்வாளா் ரகுபதி வாடிப்பட்டி அருகே பூச்சம்பட்டியில் வாகன சோதனையில் ஊழியா்களுடன் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தியபோது, லாரியில் இருந்தவா்கள் தப்பியோடினா்.
இதையடுத்து லாரியை சோதனை நடத்தியதில் சட்டவிரோதமாக ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, வருவாய் ஆய்வாளா் ரகுபதி அளித்தப் புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனா். மேலும் தப்பியோடிவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.