தொல்.திருமாவளன் மீது போலீஸில் புகாா்
By DIN | Published On : 18th November 2019 02:48 AM | Last Updated : 18th November 2019 02:48 AM | அ+அ அ- |

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவா் தொல்.திருமாவளவனை கைது செய்ய இந்து அமைப்புகள் திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளன.
புதுச்சேரியில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவா் தொல்.திருமாவளவன் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசினாராம். மேலும் தொடா்ந்து இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசும் அவரை கைது செய்யக் கோரி இந்து முன்னணியின் திருப்பரங்குன்றம் நகா் தலைவா் கிருஷ்ணன், அனுமன் சேனா நகரத் தலைவா் ராமலிங்கம் ஆகியோா் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.