உலகத் தமிழ்ச் சங்கத்தில் நாளை கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
By DIN | Published On : 11th September 2019 07:42 AM | Last Updated : 11th September 2019 07:42 AM | அ+அ அ- |

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியின், மதுரை மண்டல அளவிலான போட்டிகள் உலகத் தமிழ்ச் சங்கத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 12) நடைபெறுகிறது.
தமிழ் வளர்ச்சித் துறை, உலகத் தமிழ்ச் சங்கம், வெற்றி அரசு ஐஏஎஸ் அகாதெமி, இளந்தமிழர் இலக்கியப் பேரவை ஆகியன இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன. மதுரை மண்டல அளவிலான போட்டியில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்தோர் பங்கேற்கின்றனர்.
மொழிப்போராட்டம், இன்றும் தமிழ்-என்றும் தமிழ், வல்லமை கொண்ட வள்ளுவம், யாமறிந்த மொழிகளிலே, புதியதோர் உலகு செய்வோம், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், யாதும் ஊரே யாவரும் கேளிர், ரௌத்திரம் பழகு, அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உலகை உலுக்கிய புத்தகங்கள் என்ற தலைப்புகளில் போட்டியில் பங்கேற்கலாம்.