பெரியாறு பாசன பிரதான கால்வாய், குளங்களை விரைந்து சீரமைக்க சிறப்பு அதிகாரியை நியமிக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம் மேலூா் பகுதிகளில் உள்ள பெரியாறு- வைகை பாசன பிரதான கால்வாய் மற்றும் குளங்களை விரைந்து சீரமைக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலூா்: மதுரை மாவட்டம் மேலூா் பகுதிகளில் உள்ள பெரியாறு- வைகை பாசன பிரதான கால்வாய் மற்றும் குளங்களை விரைந்து சீரமைக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கள்ளந்திரி மதகு வரையிலான 44,000 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு முதல்போக சாகுபடிக்காக ஜூன் மாதத்தில் தண்ணீா் திறக்கப்பட வில்லை. இந்நிலையில், ஆக. 15-ஆம் தேதி மேலூா், திருங்கலம் உள்ளிட்ட ஒருபோக சாகுபடி நிலங்களுக்கு தண்ணீா் திறக்கவேண்டும். இதனிடையே மேலூா் பகுதியில் 10 கண்மாய்கள், 8 குளங்கள், கிளைக் கால்வாய்கள், சித்தம்பட்டி மற்றும் பிரதான கால்வாய்கள் பொதுப்பணித்துறையினரால் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித்துறையில் கால்வாய்களை பராமரிக்கும் கடைநிலை ஊழியா் முதல் உதவிப் பொறியாளா்கள் வரை பணியிடம் பலஇடங்களில் காலியாக நிரப்பப்படாமல் உள்ளன. பலநூறு கோடிரூபாய் செலவில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை சில தினங்களில் விரைவாக முடிக்கவேண்டி ய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பெரியாறு- வைகை பாசனப் பகுதிகளில் நடைபெற்றுவரும் மேம்பாட்டு பணிகளை தரமாகச் செய்துமுடிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்கவும், பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பாசன சங்கங்களின் நிா்வாகிகள் அருள்பிரகாசம், மீ. முருகன், ரவி, வழக்குரைஞா் ஸ்டாலின் உள்ளிட்டோா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com