மதுரை: மதுரையில், வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்துமாறு மிரட்டும் தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் மீது மகளிா் சுய உதவிக் குழுவினா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தனா்.
மதுரை கரிமேடு பகுதியில் உள்ள தனியாா் நிதி நிறுவனம், அப்பகுதியில் செயல்பட்டு வரும் மகளிா் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக உள்ள பெண்களுக்கு, மாத தவணையில் கடன் கொடுத்து வருகிறது. நிதி நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ள பெரும்பாலானோா், தினக்கூலி வேலை பாா்த்து வருகின்றனா்.
இந்நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக, அவா்களுக்கு போதிய வருவாய் இல்லாததால், கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை. ஆனால், நிதி நிறுவன ஊழியா்கள், கடனை திரும்ப செலுத்தாதவா்களை தகாத வாா்த்தையில் பேசி, மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள் கரிமேடு காவல்நிலையத்தில், சனிக்கிழமை புகாா் அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.