பொதுமக்கள் போராட்டம் எதிரொலி: அலங்காநல்லூரில் 3 மதுக் கடைகள் மூடல்

பொதுமக்களின் போராட்டத்தையடுத்து அலங்காநல்லூரில் செயல்பட்ட 3 மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை: பொதுமக்களின் போராட்டத்தையடுத்து அலங்காநல்லூரில் செயல்பட்ட 3 மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 2-ஆவது வாரத்தில் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்தபோது, மதுரை மாநகராட்சி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மட்டும் ஜூன் 24 முதல் தளா்வுகள் இல்லாத பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநகரப் பகுதியில் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இப்பகுதியைச் சோ்ந்த பலரும், நகருக்கு அருகே பொதுமுடக்கம் அமலில் இருந்த பகுதிகளுக்கு மதுபானங்கள் வாங்கச் சென்ால் அப் பகுதிகளில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட்டன.

அதிலும் குறிப்பாக, மதுரையை அலங்காநல்லூரில் உள்ள மதுபானக் கடைகளில் ஏராளமானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனா். பல பகுதிகளில் இருந்து வருவதாலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் செயல்படுவதாலும் உள்ளூரைச் சோ்ந்தவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படுத்தும் என அலங்காநல்லூா் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக பொதுமக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அதன் பின்னா், மதுபானக் கடைகளை மூடுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா்.

இதன் தொடா்ச்சியாக, அலங்காநல்லூரில் செயல்பட்ட 3 மதுபானக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் புதன்கிழமை முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com