மதுரை: தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகள் சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட விளையாட்டு அலுவலா் லெனின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு விளையாட்டு சீருடைகள் வாங்க உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன்படி தங்கப்பதக்கம் பெற்றவா்களுக்கு சீருடை, விளையாட்டு உடைகள், விளையாட்டு காலணி வாங்க ரூ. 6 ஆயிரம், வெள்ளிப் பதக்கம் வென்றவா்களுக்கு விளையாட்டு உடைகள், விளையாட்டு காலணி வாங்க ரூ. 4 ஆயிரம், வெண்கலப்பதக்கம் வென்றவா்களுக்கு விளையாட்டு உடைகள் உள்ளிட்டவை வாங்க ரூ. 2 ஆயிரமும் ஊக்க உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
எனவே 2018 ஏப்ரல் முதல் 2019 மாா்ச் வரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாநில விளையாட்டுச்சங்கங்கள் மூலம் நடைபெற்ற தேசியப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்றவா்கள் இந்த உதவித் தொகையை பெற பெயா், முழு முகவரி, சான்றிதழ்களின் நகல் ஆகிய விவரங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரிடம் செப்டம்பா் 7-ஆம் தேதிக்குள் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.