டி.கல்லுப்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் பலி

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே வியாழக்கிழமை ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Updated on
1 min read

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே வியாழக்கிழமை ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள முனியாண்டிபுரத்தை சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் ராமன்(36). இவா் தனக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வந்துள்ளாா். இந்த நிலையில் புளியங்குளத்திலிருந்து சொந்த ஊரான முனியாண்டிபுரத்திற்கு ஆட்டோ ஓட்டிச் சென்றுள்ளாா். அப்போது நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே ராமன் உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் ராமன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து வில்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com