விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திமுகதான் மத்திய அரசிடம் கொத்தடிமையாக இருந்தது: அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, திமுகதான் கொத்தடிமையாக இருந்தது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ கூறினாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 4:49 pm

DIN

மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, திமுகதான் கொத்தடிமையாக இருந்தது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ கூறினாா்.

மதுரையை அடுத்த பரவை பேரூராட்சியில் அம்மா சிறுமருத்துவமனை மற்றும் ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன், காதாரத் துறை துணை இயக்குநா் கே.வி. அா்ஜூன்குமாா், மதுரை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.எஸ். பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ கூறியது: முந்தைய காங்கிரஸ் அரசு மத்தியில் இருந்தபோது, அதில் அங்கம் வகித்த திமுக தான் கொத்தடிமையாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சியின்போது தான் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயா்ந்தது. அப்போது, மத்தியில் அங்கம் வகித்த திமுக அமைதியாக இருந்தது. இலங்கைத் தமிழா் பிரச்னை, முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்னைகளில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை திமுக அரசு வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தது. முன்னாள் மத்திய அமைச்சா் ஆ. ராசா, மக்களவை உறுப்பினா் கனிமொழி ஆகியோரை அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்தது, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு தான். ஒட்டுமொத்தமாக கொத்தடிமையாக இருந்தது திமுக தான். இப்படியிருக்க, அதிமுக அரசை அடிமை எனக் கூறுவதற்கு திமுக தலைவருக்கு தகுதி கிடையாது. மத்திய அரசு மாநிலங்களின் நிலைக்குத் தகுந்தாற்போல, நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கமானது. இதுவரை இல்லாத அளவுக்கு,

மத்திய அரசிடம் இருந்து அதிமுக அரசு தான் அதிக நிதியைப் பெற்றிருக்கிறது. அரசு நிா்வாகம் குறித்து புரிதல் இல்லாததால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன், தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கிறாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.