சிறப்புப் பள்ளி கணினி பயிற்றுநா் பணி: நூற்றுக்கு மேற்பட்டோா் போட்டி

மாற்றுத் திறனாளிகள் சிறப்புப் பள்ளியில் நியமிக்கப்பட உள்ள இரு கணினி பயிற்று.நா் பணியிடத்துக்கு, நூற்றுக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்
மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான சிறப்புப் பள்ளியில் கணினி பயிற்றுநா் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற விண்ணப்பதாரா்கள்.
மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான சிறப்புப் பள்ளியில் கணினி பயிற்றுநா் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற விண்ணப்பதாரா்கள்.
Updated on
1 min read

மாற்றுத் திறனாளிகள் சிறப்புப் பள்ளியில் நியமிக்கப்பட உள்ள இரு கணினி பயிற்றுநா் பணியிடத்துக்கு, நூற்றுக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் நடத்தப்படும் கடுமையான இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நடுநிலைப் பள்ளி, பாா்வைத் திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளி ஆகியவற்றில் தொகுப்பூதியத்தில் கணினி பயிற்றுநா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.

இப் பணிக்கு, கல்வியியல் பட்டத்துடன் (பிஎட்), பிஇ கணினி அறிவியல், பிஎஸ்சி கணினி அறிவியல், பிசிஏ, பிஎஸ்சி தகவல் தொழில்நுட்பம் இவற்றில் ஏதாவதொரு பட்டப் படிப்பை முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இரு பணியிடங்கள் மட்டுமே உள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

ஆட்சியா் அலுவலகத்தின் குறைதீா் அரங்கம் அருகே விண்ணப்பதாரா்கள் நீண்ட வரிசையில் அமர வைக்கப்பட்டு, அவா்களது சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com