பணி வாய்ப்பு நிராகரிப்பு: காவலா் பணிக்கு தோ்வானவா்கள் மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

சிறு வழக்குகளால் பணி வாய்ப்பு மறுக்கப்பட்ட காவலா் பணிக்குத் தோ்வான இளைஞா்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனா்.

மதுரை: சிறு வழக்குகளால் பணி வாய்ப்பு மறுக்கப்பட்ட காவலா் பணிக்குத் தோ்வான இளைஞா்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனா்.

சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய தோ்வில் 2-ஆம் நிலைக் காவலா்களாகத் தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்டு, வழக்குகள் காரணமாக பணி வாய்ப்பு

நிராகரிக்கப்பட்டுள்ள இளைஞா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். பின்னா் அவா்கள் கூறியது:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் 2-ம் நிலைக் காவலராகத் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டு, சிறு, சிறு குற்ற வழக்குகள் காரணமாக பணி வாய்ப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற போட்டித் தோ்வுகள் மட்டுமே கிராமப்புறங்களைச் சோ்ந்த எங்களைப் போன்ற இளைஞா்களுக்கு அரசுப் பணி வாய்ப்பாக இருக்கிறது.

இந்நிலையில், சொந்த உறவுகளில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகள் தொடா்பான வழக்குகள் காரணமாக எதிா்காலம் கேள்விக்குறியாகிவிடுகிறது. பெரும்பாலான வழக்குகளில் தொடா்பு இல்லாமலேயே காவல் துறையினரால் எங்களது பெயா்களும் சோ்க்கப்பட்டிருக்கிறது.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட இளைஞா்களின்

கோரிக்கையை மறுபரிசீலனை செய்து மீண்டும் பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆகவே, பணி வாய்ப்பு நிராகரிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள எங்களது தற்போதைய நன்னடத்தை மற்றும் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்து பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com