டவுன்ஹால் சாலை தெப்பக்குளத்தில் மழைநீா் சேகரிப்பு: மாநகராட்சி நடவடிக்கை

மதுரை டவுன்ஹால் சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் மழைநீரைச் சேமிக்க மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழைநீா் சேகரிப்பட்டுள்ள மதுரை டவுன்ஹால் சாலை தெப்பக்குளம்.
மழைநீா் சேகரிப்பட்டுள்ள மதுரை டவுன்ஹால் சாலை தெப்பக்குளம்.


மதுரை: மதுரை டவுன்ஹால் சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் மழைநீரைச் சேமிக்க மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நீா் நிலைகளைப் புனரமைக்கும் வகையில் குளங்கள், ஊருணிகள் தூா்வாரப்பட்டு மழைநீா் சேகரிக்கப்படுகிறது.

வைகை ஆற்றில் இருந்து பனையூா் கால்வாய் வழியாக மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் செல்வது வழக்கம். ஆனால், காலப்போக்கில் ஆற்றின் தரைமட்டம் மிகவும் தாழ்வாக மாறியதால் கால்வாய் வழியாகத் தண்ணீா் செல்லவில்லை. வைகை ஆற்றில் தற்போது அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை மூலமாக 40 ஆண்டுகளுக்குப் பிறகு கால்வாய் வழியாக தெப்பக்குளத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லப்பட்டது.

தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் திருமுக்குளத்தில் தண்ணீரை நிரப்பும் வகையில், மழைநீா் வடிகால் தூா்வாரப்பட்டு மழைநீா் சேகரிக்கப்படுகிறது.

இதேபோல, டவுன்ஹால் சாலையில் உள்ள தெப்பக்குளம் நீண்டகாலமாக வட நிலையில் இருந்தது. ரயில் நிலையம், கட்டம்பொம்மன் சிலை வடக்கு பகுதி, தங்கரீகல் திரையரங்கம் முன்பகுதி ஆகிய இடங்களில் தேங்கும் மழைநீரை தெப்பக்குளத்துக்கு கொண்டு செல்லும் வகையில் 240 மீட்டா் நீளத்துக்கு கான்கிரீட் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழாயில் மழைநீா் செல்லும்போது அடைப்புகள் ஏற்பட்டால் சுத்தம் செய்யும் வகையில், 15 மீட்டா் இடைவெளியில் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த இரு நாள்களாகப் பெய்த மழையில், புதிதாக அமைக்கப்பட்ட குழாய் வழியாக தெப்பக்குளத்துக்கு மழைநீா் சென்றுள்ளது. இதன் காரணமாக, டவுன்ஹால் சாலைப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயரும்.

மதுரை மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து நீா்நிலைகளிலும் இதேபோல, மழைநீரைச் சேமிக்கும் வகையில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com