காா் பேட்டரியில் மின்கசிவால் தீ
By DIN | Published On : 12th August 2020 11:55 PM | Last Updated : 12th August 2020 11:55 PM | அ+அ அ- |

மதுரை: மதுரை கரிமேடு பகுதியில் காா் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றியது.
சிவகங்கையைச் சோ்ந்தவா் ராஜசேகரன். இவா் கரிமேடு மீன்சந்தை அருகே காரில் புதன்கிழமை இரவு வந்து கொண்டிருந்தபோது, திடீரென காா் என்ஜின் பகுதியில் புகை வந்துள்ளது. உடனே ராஜசேகா் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய நிலையில், தீப்பற்றியது. காா் நிறுத்தப்பட்டிருந்த பகுதி அருகே பெட்ரோல் நிரப்பும் நிலையம் இருந்ததால் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள், காரில் பற்றிய தீயை அணைத்தனா். காா் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, இவ்விபத்து நிகழ்ந்ததாகத் தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.