எம்.ஜி.ஆா். பேருந்து நிலைய கடைகளுக்கு வாடகை செலுத்துவதில்விலக்கு கோரி வழக்கு: மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவு

மதுரை எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்குப் பொதுமுடக்கக் காலத்திற்கு வாடகை செலுத்துவதில் விலக்கு அளிக்கக் கோரும் வழக்கில், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை


மதுரை: மதுரை எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்குப் பொதுமுடக்கக் காலத்திற்கு வாடகை செலுத்துவதில் விலக்கு அளிக்கக் கோரும் வழக்கில், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பொதுமுடக்கம் காரணமாக மாா்ச் 24 ஆம் தேதி முதல் மதுரை எம்.ஜி. ஆா் பேருந்து நிலையத்தில் உள்ள 185 கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பேருந்து நிலையத்தில் கடை நடத்தி வந்தவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வாடகையைச் செலுத்த இயலாத நிலையில் கடை உரிமையாளா்கள் இருக்கின்றனா்.

ஆகவே, எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு பொதுமுடக்கக் காலத்தில் வாடகை செலுத்துவதில் விலக்கு அளிக்கக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தோம். ஆனால் அதற்கு இதுவரை எவ்வித பதிலும் இல்லை. எனவே மதுரை எம்.ஜி.ஆா் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு வாடகை செலுத்துவதில் விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சோ்ந்த ஜாகிா் ஹூசைன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com