எய்ட்ஸ் தின உறுதி மொழி
By DIN | Published On : 03rd December 2020 06:18 AM | Last Updated : 03rd December 2020 06:18 AM | அ+அ அ- |

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி புதன்கிழமை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் எய்ட்ஸ் தின உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.
உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிச. 1 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. திருமங்கலம் அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் தின உறுதி மொழி புதன்கிழமை எடுக்கப்பட்டது. அரசு மருத்துவமனை மற்றும் ஏஆா்டி மையம் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு ஏஆா்டி மைய மருத்துவா் செல்வராஜ் மனோகரன் தலைமை வகித்துப் பேசினாா். திருமங்கலம் அரசுமருத்துவமனை தலைமை மருத்துவா் பூமிநாதன் எய்ட்ஸ் உறுதிமொழியை வாசித்தாா். இதில் மருத்துவமனை செவிலியா்கள், ஊழியா்கள், பொதுமக்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...