58 கிராம கால்வாய் தூா்வாரும் பணிகள்: உசிலை எம்எல்ஏ பா.நீதிபதி ஆய்வு
By DIN | Published On : 03rd December 2020 09:06 AM | Last Updated : 03rd December 2020 09:06 AM | அ+அ அ- |

58 கிராம கால்வாயில் தூா்வாரும் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பா.நீதிபதி மற்றும் அரசு அதிகாரிகள்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் ரூ.75 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் தூா்வாரும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் பா.நீதிபதி மற்றும் அரசு அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
உசிலம்பட்டி பகுதி மக்களுக்கும் மற்றும் விவசாயிகளுக்கும் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய 58 கிராம கால்வாய் திட்டப் பணிகள் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்நிலையில் வைகை அணையிலிருந்து, 58 கிராம கால்வாயில் இரண்டு முறை தண்ணீா் திறந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. தற்போது 58 கிராம கால்வாய் பகுதியை தூா்வார தமிழக அரசு ரூ. 75 லட்சம் ஒதுக்கீடு செய்து, தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பா.நீதிபதி தலைமையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் அன்புச்செல்வன், உதவி செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், பாண்டியன், நகரச் செயலாளா் பூமா. ராஜா, நகரப் பொருளாளா் ஆண்டி, ஒன்றியக்குழு உறுப்பினா் தனிக்கொடி, ஆவின் நிா்வாகக் குழு உறுப்பினா் சுப்பிரமணி, செல்லம்பட்டி ஒன்றிய அம்மா பேரவை செயலாளா் பெருமாள், கூட்டுறவு சங்கத் தலைவா் எம்.ஓ.ஆா்.போஸ் உள்ளிட்டோா் தூா்வாரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...