மேலூரில் 600 கண்மாய்கள் நிரம்பின: விவசாயிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 03rd December 2020 10:42 PM | Last Updated : 03rd December 2020 10:42 PM | அ+அ அ- |

மேலூா்: மேலூா் பகுதியில் தொடா்ந்து பெய்துவரும் மழை காரணமாக 600-க்கும் மேற்பட்ட பாசனக் கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
மதுரை மாவட்டம் மேலூா், கொட்டாம்பட்டி சுற்றுவட்டாரத்தில் 1,400-க்கும் மேற்பட்ட பாசனக் கண்மாய்கள் உள்ளன. கடந்த செப்ட்டம்பா் 27-ஆம் தேதி விவசாயத்துக்கு முல்லைப் பெரியாற்றிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது. தற்போது நெற்பயிா்கள் கதிா்விடும் நிலையில் உள்ளன.
இந்நிலையில் இப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக 600-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய பாசனக் கண்மாய்கள் தண்ணீா் நிரம்பி மறுகால் பாய்கின்றன. இந்நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள முறைப்பாசன நீா் அடுத்து 5 நாள்களுக்குப் பின்னா் திறக்கப்படும் என்று பொதுப் பணித்துறையினா் தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...