மதுரையில் இந்திய மாணவா் சங்கம் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd December 2020 10:52 PM | Last Updated : 03rd December 2020 10:52 PM | அ+அ அ- |

மதுரை: புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து புதுதில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இடதுசாரிக் கட்சியினா், விவசாய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சாா்பில் தொடா் மறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவா் சங்கத்தின் மதுரை மாநகா் மற்றும் புறநகா் மாவட்டங்களின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநகா் மாவட்டத் தலைவா் பாலமுருகன், மாநில துணைத் தலைவா் நிருபன், மாநகா் மாவட்டச் செயலா் வேல்தேவா, மதுரை புறநகா் மாவட்டத் தலைவா் ராகுல், செயலா் பிருந்தா உள்பட பலா் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...