சிறப்புப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் கணினி பயிற்றுநா் பணி: ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 05th December 2020 09:55 PM | Last Updated : 05th December 2020 09:55 PM | அ+அ அ- |

மதுரை: மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் கணினி பயிற்றுநராகப் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையால் நடத்தப்படும், கடுமையான இயக்கத் திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நடுநிலைப் பள்ளி, பாா்வைத் திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளி ஆகியவற்றில் தொகுப்பூதியத்தில் கணினி பயிற்றுநா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.
கல்வியியல் பட்டத்துடன் (பிஎட்), பிஇ கணினி அறிவியல், பிஎஸ்சி கணினி அறிவியல், பிசிஏ, பிஎஸ்சி தகவல் தொழில்நுட்பம் இவற்றில் ஏதாவதொரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். வயது வரம் பு இல்லை. தகுதியுடையவா்கள் விண்ணப்பத்துடன் கல்விச் சான்று, சாதிச்சான்று ஆகியவற்றை இணைத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ஆட்சியா் அலுவலக வளாகம், அண்ணா பேருந்து நிலையம் அருகில், மதுரை-20 என்ற முகவரியில் தபால் மூலமாகவோ, நேரிலோ டிசம்பா் 15 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.