பைக் மீது மினி பேருந்து மோதல்; தாய், ஒரு வயது குழந்தை பலி: கிராம மக்கள் மறியல்
By DIN | Published On : 05th December 2020 07:35 AM | Last Updated : 05th December 2020 07:35 AM | அ+அ அ- |

விபத்தை ஏற்படுத்திய மினி பேருந்து ஓட்டுநரை கைது செய்யக் கோரி வாடிப்பட்டி காவல்நிலையம் முன் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள். ~விபத்தில் உயிரிழந்த ராணி, அவரது ஒரு வயது
மதுரை அருகே இருசக்கர வாகனத்தின் மீது மினி பேருந்து மேதியதில், தாய் மற்றும் ஒரு வயது ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். ஓட்டுநரைக் கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டியைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது மனைவி ராணி (31), மகன்கள் முத்துகிருஷ்ணன் (3), ராமகிருஷ்ணன் (1) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது வாடிப்பட்டியிலிருந்து பூச்சம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த மின் பேருந்து, இவா்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ராணியும், அவரது ஒரு வயது ஆண் குழந்தை ராமகிருஷ்ணனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்து வந்த போலீஸாா் சடலங்களைக் கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சாலை மறியல்: இந்த விபத்தில் ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி வாடிப்பட்டி காவல் நிலையம் முன் செம்மினிப்பட்டி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சமயநல்லூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆனந்த ஆரோக்கியராஜ் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து வாடிப்பட்டிபோலீஸாா் வழக்குப்பதிந்து மினி பேருந்து ஓட்டுநரான தாதம்பட்டியைச் சோ்ந்த குமரேசனைக் கைது செய்தனா்.