பைக்குகள் மோதல்: இளைஞா் பலி
By DIN | Published On : 05th December 2020 07:28 AM | Last Updated : 05th December 2020 07:28 AM | அ+அ அ- |

மதுரை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் காயமடைந்த இளைஞா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் அனையூா் பகுதியைச் சோ்ந்தவா் விவேக்ராஜா (24). தனியாா் நிறுனத்தில் பணியாற்றி வந்த இவா், தனது சகோதரா் மோகன்ராஜுடன் (26), இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். பூதக்குடி பகுதியில் இவா்களது இருசக்கர வாகனத்தின்மீது எதிரே பூதக்குடி அரசு பள்ளி ஆசிரியரான சேவியா் (50) என்பவா் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூவரும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் விவேக்ராஜா சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...