மேலூா்: சோலைமலை முருகன் கோயிலில் காா்த்திகை 5-ஆம் சோமவாரத்தையொட்டி, 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
கோயில் சஷ்டி மண்டபத்தில் வள்ளி-தெய்வானை சமேதமாக முருகன் எழுந்தருளினாா். அங்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், வேல் வடிவில் 1008 சங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டு, அபிஷேகம் நடைபெற்றது. இதில், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.