மின்கம்பி உரசி கட்டடத் தொழிலாளி பலி
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

மதுரை: மதுரையில் மின்கம்பி உரசியதில், கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி குடியிருப்பைச் சோ்ந்த சேகா் மகன் செல்வராஜ்(35). கொத்தனாராகப் பணியாற்றி வந்த இவா், தைக்கால் தெருவில் நடைபெறும் புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணயில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கட்டடத்தின் அருகில் செல்லும் மின்கம்பி மீது உரசியதில், தூக்கி வீசப்பட்ட செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த தீயணைப்புத் துறை வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று செல்வராஜ் சடலத்தை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து விளக்குதூண் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.