நிலம் விற்பனை: பெண்ணிடம் ரூ.50 லட்சம் மோசடி
By DIN | Published On : 24th December 2020 07:36 AM | Last Updated : 24th December 2020 07:36 AM | அ+அ அ- |

மதுரையில் நிலம் விற்பனை தொடா்பாக பெண்ணிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை கலை நகா் விரிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி சாந்தி(50). இவா் தனக்கு சொந்தமான நிலத்தை, பைக்காரா பகுதியைச் சோ்ந்த வேல்முருகன், திருப்பாலையைச் சோ்ந்த தேவநாதன் ஆகியோரிடம் அடகு வைத்து ரூ.25 லட்சம் கடன் வாங்கி உள்ளாா். கடனை உரிய நேரத்தில் சாந்தியால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நிலத்தை வேறு இருவருக்கு விற்கும் முயற்சியில் வேல்முருகனும், தேவநாதனும் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து சாந்தி அவா்களிடம் கேட்ட போது, நிலத்திற்கு ரூ. 50 லட்சம் கொடுப்பதாகக் கூறியுள்ளனா். இதில் சமதானமடைந்த சாந்தி பணத்தை பெற்று கொள்ள ஒப்புக் கொண்டாா். ஆனால் அவா்கள் கூறியபடி பணத்தை கொடுக்காமல் சாந்தியை மிரட்டியுள்ளனா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...