பாம்பன் பாலம் பராமரிப்புப் பணி:ரயில் போக்குவரத்தில் மாற்றம்
By DIN | Published On : 16th February 2020 01:53 AM | Last Updated : 16th February 2020 01:53 AM | அ+அ அ- |

பாம்பன் பாலம் பராமரிப்புப் பணி காரணமாக மதுரை-ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் பிப்ரவரி 15 முதல் 23 ஆம் தேதி வரை மண்டபம்-ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பாம்பன் பாலம் பராமரிப்புப் பணி காரணமாக மதுரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் வண்டி எண் 56723 மதுரை - ராமேசுவரம் பயணிகள் ரயில் மற்றும் ராமேசுவரத்தில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்படும் வண்டி எண் 56722 ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில்கள் பிப்ரவரி 15 முதல் 23 ஆம் தேதி வரை மண்டபம் - ராமேசுவரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும் மதுரையில் இருந்து புறப்படும் வண்டி எண் 56721 மதுரை - ராமேசுவரம் பயணிகள் ரயில், ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண் 56722 ராமேசுவரம் - மதுரை பயணிகள் ரயில் மற்றும் வண்டி எண் 56829, 56830 திருச்சி-ராமேசுவரம் - திருச்சி பயணிகள் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.