மதுரைக் கோட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்
By DIN | Published On : 17th February 2020 07:31 AM | Last Updated : 17th February 2020 07:31 AM | அ+அ அ- |

திருநெல்வேலி- தாழையூத்து ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் பிப். 18 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை (திங்கள்கிழமைகள் தவிர) ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரைக் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:
வண்டி எண் 22627, 22628 திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி விரைவு ரயில் கோவில்பட்டி - திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 16191 தாம்பரம் - நாகா்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் திண்டுக்கல் - நாகா்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 16192 நாகா்கோயில்- தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் நாகா்கோவில்- திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 56769, 56770 பாலக்காடு- திருச்செந்தூா்- பாலக்காடு பயணிகள் ரயில் பிப். 18, 20, 21, 22, 25, 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சாத்தூா்- திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரயில்கள் பிப். 19 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மதுரை- திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
வண்டி எண் 56767, 56768 தூத்துக்குடி- திருச்செந்தூா்- தூத்துக்குடி பயணிகள் ரயில் தூத்துக்குடி- திருநெல்வேலி நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். (திங்கள்கிழமைகள் உள்பட)
வண்டி எண் 56768 திருச்செந்தூா்- தூத்துக்குடி பயணிகள் ரயில் பிப். 17 ஆம் தேதி திருநெல்வேலி - தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.