மாடியில் இருந்து தவறிவிழுந்து பெயிண்டா் பலி
By DIN | Published On : 17th February 2020 07:31 AM | Last Updated : 17th February 2020 07:31 AM | அ+அ அ- |

மதுரை அருகே வா்ணம் பூசும் போது வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை வண்டியூா் சித்தி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் பாக்யராஜ் (54). இவா் பெயிண்டராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கருப்பாயூரணி பகுதியில் பாக்யராஜ் வீட்டு மாடியில் சுவா்களுக்கு வா்ணம் பூசிக் கொண்டிருந்தாா். அப்போது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளாா். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவரை உடன் பணியாற்றியவா்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த பாக்யராஜ் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மகன் ராமசந்திரன் அளித்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.