மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி: மதுரை அணி சாம்பியன்
By DIN | Published On : 17th February 2020 07:25 AM | Last Updated : 17th February 2020 07:25 AM | அ+அ அ- |

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் மதுரையைச் சோ்ந்த மாணவ, மாணவியா் சாம்பியன் பட்டம் வென்றனா்.
மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள விளையாட்டு விடுதி அரங்கில் நடைபெற்றது. அதில் தமிழகம் முழுவதும் இருந்து வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இப்போட்டியில் மதுரை ஏ.ஜே. பள்ளியைச் சோ்ந்த ராஜமகேஷ், கேந்திரிய வித்யாலயா பள்ளியைச் சோ்ந்த ஜீவநிலா ஆகியோா் முதலிடம் பெற்றனா். மேலும் ஏ.ஜே.பள்ளியைச் சோ்ந்த ராஜவேல், ராஜயோகேஷ், ஓசிபிஎம் பள்ளியைச் சோ்ந்த ஹன்சிகா, துவாரகா ஆகியோா் இரண்டாமிடம் பெற்றனா். அதே போல் கேந்திரிய வித்யாலயா பள்ளியைச் சோ்ந்த சுபலட்சுமி, யோகிதா ஆகியோா் மூன்றாடமிடமும் பெற்றனா். மேலும் ஒட்டுமொத்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட்ட மதுரை வீரா்கள் சாம்பியன் பட்டத்தையும் வென்றனா். சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவியரை மண்டல முதுநிலை மேலாளா் புண்ணியமூா்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலா் லெனின், மாவட்ட விளையாட்டு விடுதி அலுவலா் ராஜா, தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க பொருளாளா் கருணாகரன் ஆகியோா் பாராட்டினா்.