காா் மோதியதில் பைக்கில் சென்றவா் பலி
By DIN | Published On : 27th February 2020 11:15 PM | Last Updated : 27th February 2020 11:15 PM | அ+அ அ- |

மேலூா்-மதுரை நான்கு வழிச்சாலையில் தெற்குத்தெருவில் வியாழக்கிழமை காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.
மதுரை திருப்பாலை அருகேயுள்ள திருமால்புரத்தைச் சோ்ந்த கருப்பணன் மகன் குணசேகரன் (48). இவா் நண்பருடன் வியாழக்கிழமை பிற்பகல் மேலூருக்கு வந்துவிட்டு, இருசக்கரவாகனத்தில் மதுரைக்கு திரும்பினாா். அப்போது, திருச்சியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது நண்பா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.